உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது பெர்முடா அரசாங்கமும் டிசம்பர் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட விலக்குகளை சரிபார்க்கவும், நிலையான அபராத அறிவிப்புகளை வெளியிடவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து செய்தி தொடர்பாளர் கூறியபோது “தேசிய பாதுகாப்பு அமைச்சர் லாரன்ஸ் ஸ்காட் உத்தரவின்படி டிசம்பர் 24 அதிகாலை 12.30 மணி முதல் ஜனவரி 20, 2022 வரை தினசரி இரவு 12.30 முதல் 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும்.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அவசரகால தேவைகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதை தவிர தினசரி நள்ளிரவு 12.30 முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த நேரங்களில் யாரும் தங்களது வீடுகள் அல்லது தங்கும் இடத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் பெற்றோருடன் இல்லாத குழந்தைகள் நைட் சாட்டில் இரவை கழிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தியோகபூர்வ வணிகத்தின்போது வேலை செய்யும் நபர்கள் எல்லா நேரங்களிலும் அடையாள அட்டையை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தேவை ஏற்பட்டால் அவற்றை அமலாக்க அதிகாரிகளிடம் காட்டவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஒரு நபர் அல்லது கிளப்பின் உரிமையாளர் முறையான நோய் தடுப்பு நடவடிக்கையுடன் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இந்த பார் அல்லது கிளப்பில் எந்த நேரத்திலும் 10 பேருக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேஜைகள் குறைந்தது 6 அடி இடைவெளியில் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைதவிர சர்வதேச விமான நிலையத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களும் ஊரடங்கு சட்ட த்தின் போது விமான நிலையத்திற்கு சென்று வர உரிமம் பெற்ற பாதுகாப்பு அதிகாரிகளின் ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.