Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாடிக்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த விசைத்தறி தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் ரகுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவர் கடந்த 19ம் தேதி தனது வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மேலே நின்று கொண்டிருந்த ரகுபதி திடீரென நிலைதடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ரகுபதியை அவரது குடும்பத்தினர் மீட்டுஉடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மேல் சிகிச்சைக்காக அவரை  கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ரகுபதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு டவுன் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |