நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கணவரை இழந்த அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அமுதாவின் நடத்தை மீது மாரியப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனையடுத்து மாரியப்பன் கோவிலுக்கு செல்லலாம் எனக் கூறி அமுதாவை அழைத்து சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த அமுதாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அமுதா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மாரியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.