வெறிநாய்கள் கடித்ததால் 20 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பனையன்குளம் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் சுற்றித்திரிந்த 2 வெறி நாய்கள் 40-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதனால் 20 ஆடுகள் பரிதாபமாக இறந்துவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்த நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் ஆழ்வாநேரி பஞ்சாயத்து தலைவர் சீனிவாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.