Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரவில் சீறிப்பாய்ந்த பைக்குகள்… 21 பேரை மடக்கிப் பிடித்த போலீஸ்..!!

மருதமலை வடவள்ளி செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவில் பைக் ரேசில் ஈடுபட்ட 21 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து, 11 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

கோயம்புத்தூர் மருதமலை வடவள்ளி சாலையில் டிசம்பர் 10ஆம் தேதி இரவு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஐ.ஒ.பி காலனியில் பைக் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த 21 இளைஞர்களை காவல் துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

அதன்பின்அந்த 21 இளைஞர்கள் மீது சந்தேக வழக்குப்பதிவு செய்து எச்சரிக்கை செய்து விடுவித்தனர். சென்னை போன்ற முக்கிய இடங்களில் இரவு நேர பைக் பந்தயத்தில் ஈடுபடும் இளைஞர்களை காவலர்கள் தடுத்து கைது செய்து வந்தனர்.

அந்தவகையில், கோவையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பது வருந்தத்தக்கது எனப் பொதுமக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இதை தடுக்க கோவை காவல் துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறியிருக்கின்றனர்.

Categories

Tech |