Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கணவன்-மனைவி படுகொலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. பிச்சைகாரர் கைது….!!

பிச்சை எடுக்கும் போது ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத கோவில் ரத வீதியில் கடந்த 18ஆம் தேதி அப்பகுதியில் பிச்சை எடுத்து வரும் வேல்முருகன் மற்றும் அவரது மனைவி ராமு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனை அறிந்த ராமேஸ்வரம் காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அதே பகுதியில் பிச்சை எடுத்து வரும் காரைக்குடியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் இவர்களை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் மாணிக்கத்தை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மாணிக்கத்திற்கும் வேல்முருகனுக்கும் பிச்சை எடுக்கும்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து வேல்முருகனின் மனைவி ராமு, மாணிக்கத்தின் பணத்தை யாருக்கும் தெரியாமல் அவ்வபோது திருடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து கணவன்-மனைவி இருவரையும் கொலை செய்வதாக மாணிக்கம் தெரிவித்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் மாணிக்கத்தை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |