தமிழகத்தில் கொரோனா பிரச்சினை முடிவதற்குள் புதிதாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வெளிமாநிலங்களில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தற்போது தமிழகத்திலும் நுழைந்துள்ளது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பாதிப்பிலிருந்த 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31 ஆக குறைந்துள்ளது என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.