Categories
மாநில செய்திகள்

ஒமிக்ரான் தொற்று பரவல்….  தமிழ்நாடு 3ம் இடம்…. வெளியான தகவல்….!!!

ஒமைக்ரான் தொற்று பரவலில் தமிழகத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மொத்த மதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்  தமிழகத்தில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இன்னும் 24 பேருக்கு தொற்று உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொற்று உறுதியான 34 பேரில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகம் வந்தவர்.

கொரோனா உறுதியான  114 பேரில் 57 பேருக்கு அறிகுறி இருந்ததால் அவர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதுவரை தமிழகத்தில் சென்னையில் 26 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் இரண்டு பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்திய அளவில் ஒமைக்ரான் பாதிப்பில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதனால் மக்கள் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |