இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியை உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள கன்னியப்பபிள்ளைபட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அருள்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கொடைக்கானல் வசிக்கும் இவரது நண்பர் மற்றும் அவரது அக்காள், அக்காள் மகள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பாக கதிர்நரசிங்க புரத்தில் உள்ள அருள்குமரனின் வீட்டில் தங்கியுள்ளனர். அப்போது அருள்குமரன் நண்பரின் அக்காள் மகள் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோவாக எடுத்து அதனை வைத்து மிரட்டி அந்த இளம் பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும் இளம்பெண்ணின் புகைப்படத்தையும் அருள்குமரன் படத்தையும் போலியாக திருமணம் நடந்ததாக தயாரித்து அவரது தாயாரிடம் காண்பித்து அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க கூடாது என மிரட்டியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தாயார் உடனடியாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அருள்குமரனை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர் செல்போனில் இருந்த ஆபாசமான புகைப் படங்களையும் கைப்பற்றி உள்ளனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அருள்குமரன் தந்தை முருகேசன், தாய் சரோஜா, தங்கையின் மீனா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.