பொங்கல் பரிசு தொகுப்பில் முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருள்களை நெகிழிப் பைகளில் அடைத்து விநியோகிப்பதை தவிர்க்க வேண்டுமென்று அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விநியோகம் செய்துவருகின்றது. இன்று முதல் தமிழகத்தில் மஞ்சள் பை என்ற திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். படிப்படியாக தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதனால் முதற்கட்டமாக பொங்கல் பரிசு தொகுப்பில் முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களை நெகிழிப் பைகளில் அடைத்து விநியோகிப்பதை தவிர்க்க வேண்டுமென்று அனைத்து மண்டல இணைப்பதிவாளர் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி அறிவுறுத்தியுள்ளார்.