தமிழகத்தில் கொரோனா பிரச்சினை முடிவதற்குள் புதிதாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வெளிமாநிலங்களில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தற்போது தமிழகத்திலும் நுழைந்துள்ளது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், 10 விழுக்காடுக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தால் கட்டுப்பாடுகள் விதிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலானவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவது மூலம் தொற்று பரவலை குறைக்க முடியும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.