Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சிவகார்த்திகேயனின் “அயலான்” படத்தை வெளியிட தடை… ஐகோர்ட் அதிரடி!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ படம் மாபெரும் வெற்றியை பெற்றது.. அதனைத் தொடர்ந்து ‘அயலான்’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.. இந்த சூழலில் அந்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது..

அதாவது, படத்தை தயாரித்துள்ள 24 ஏஎம் நிறுவனம் பெற்ற ரூ 5 கோடி கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்றும், வட்டியோடு கடனை திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை கோர வேண்டும் என்று டேக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.. இந்நிலையில் இந்த வழக்கில் ரூ 5 கோடி கடனை வட்டியோடு திருப்பி செலுத்தும் வரை அயலான் படத்தை வெளியிடக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |