சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இந்த படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். இதில் ராகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாகவும் மற்றும் கருணாகரன், பானுப்பிரியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி ராஜா தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “அயலான்” படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடனை திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை கோரி டேக் என்டர்டெயின்மென்ட் வழக்கு பதிந்துள்ளது.