ஒவ்வொரு வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சேர்வது வரை நாமினி அவசியமாக உள்ளது. அவ்வகையில் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் ஓய்வூதிய திட்டத்தில் நாமினியை கட்டாயம் சேர்த்திருக்க வேண்டும். பிஎஃப் கணக்கை கிளைம் செய்யும்போது உங்களது கணக்கில் நாமினி, ஆதார், பான் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
இல்லையென்றால் அவசர நேரங்களில் அவற்றை அப்டேட் செய்து சேவைகளை பெற்றுக்கொள்ள தாமதமாகிவிடும். EPFO பயனாளர்கள் கணக்கு தொடங்கும்போது நாமினியை சேர்த்திருக்கலாம். தற்போது வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் நாமினியின் பெயரை மாற்ற விரும்பினால் சில எளிய வழி உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினியை பிஎஃப் கணக்கில் இணைப்பது குறித்தும் இதில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இந்த சேவையை நீங்கள் ஆன்லைன் மூலமே செய்து முடிக்க முடியும்.
- அதற்கு முதலில் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் services என்ற ஆப்சனை கிளிக் செய்து Employees Section என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
- பிறகு Services ஆப்சனின் கீழ் உள்ள member UAN/Online Service option என்பதை தேர்வு செய்யவும்.
- அதில் உங்களது UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்யவும்.
தொடர்ந்து MANAGE என்ற ஆப்சனின் கீழ் E- Nomination என்ற தேர்வை கிளிக் செய்யவும். - இப்போது குடும்பத்தினரின் விவரங்களை நிர்வகி என்ற பிரிவில் yes என கொடுத்து ok செய்யவும்.
பல நாமினிகளை கொடுக்க,
- முதலில் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதளத்தில் நியமன விவரங்கள் என்பதை கிளிக் செய்யவும்.
- பிறகு, EPF நாமினேஷன் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- சேவ் செய்த பிற்பாடு அடுத்த பக்கத்தில் E- sign என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.
- இப்போது ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP கிடைக்கும்.
- அதை பதிவு செய்த பிறகு, நாமினி விவரங்கள் EPFO வில் பதிவு செய்யப்படும்.
- பிறகு e – sign சேவையில் நாமினி விவரங்களை ஏற்கனவே Save செய்திருந்தால், அதனை Manage ஆப்ஷனின் தெரிந்து கொள்ளலாம்.
- இதற்காக e – sign கொடுக்க வேண்டும்.
- இப்போது புதிய விவரங்களை அப்டேட் செய்ய உங்களிடம் UAN எண், ஆதார் எண் விவரங்கள் தேவை.