சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு பகுதியில் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் அங்கு கஞ்சா விற்பனை செய்த நபர்கள் நரேந்திரன், ராஜேஷ் கண்ணா, விஷ்வா, விஜய் சுதாகரன், மற்றும் டேவிட் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.