Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களே”…. சம்பள உயர்வு எவ்வளவுன்னு தெரியுமா?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

நீண்ட காலமாகவே சம்பள உயர்வுக்காகக் காத்திருந்த அரசு ஊழியர்களுக்கு சந்தோசம் தரும் வகையில் அண்மையில்தான் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதாவது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 % உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இரட்டை மகிழ்ச்சி தரும்வகையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மேலும் உயருவதாக தகவல் வெளியானது. எனினும் இது தொடர்ப்பன அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், 2022 ஜனவரியில் மேலும் 3 சதவீத உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி 34 % அகவிலைப்படி கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.
அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.18,000 என வைத்துக்கொண்டால் 34% அகவிலைப்படியில் ரூ.6,120 கூடுதலாகக் கிடைக்கும்.

அதாவது அவர்களுடைய வருடாந்திர சம்பளம் ரூ.6,480 அதிகரிக்கும்.

அடிப்படை சம்பளம் = 18,000 ரூ

31 சதவீத அகவிலைப்படி = 5,580 ரூ (மாதம்)

34 சதவீத அகவிலைப்படி = 6,120 ரூ (மாதம்)

வித்தியாசம் = 61,20 ரூ  – 5,580 ரூ = ரூ.540

வருடாந்திர சம்பள உயர்வு = 540 x 12 = 6,480 ரூ

அடிப்படை சம்பளம் = 56,900 ரூ

31 சதவீத அகவிலைப்படி = 17,639 ரூ (மாதம்)

34 சதவீத அகவிலைப்படி = 19,346 ரூ (மாதம்)

வித்தியாசம் = 19,346 ரூ – 17,639 ரூ = 1,707 ரூ

வருடாந்திர சம்பள உயர்வு = 1,707 x 12 = 20,484 ரூ

Categories

Tech |