கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் நாகர்ஜுன் ஷிட்டோ ரியூ ஸ்போர்ட்ஸ் கராத்தே பள்ளி சார்பில் மாநில அளவிலான ஓபன் கராத்தே போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் சிவகங்கை, விருதுநகர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் ராம்நாடு போன்ற மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் மானாமதுரையில் சேர்ந்த நாகர்ஜுன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி மாணவர்கள் 20 பேர்கள் முதல் பரிசை தட்டிச் சென்றனர். இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி அழகர் மகேந்திரன், தமிழ்நாடு ஸ்போர்ட் கராத்தே சங்கத் தலைவர் குமார் ஆகியோர் சேர்ந்து பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டியுள்ளனர்.