Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 10 முதல் 15 வரை…. பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் உள்ள முக்கிய குளிர்கால பிரதேசங்களில் ஹிமாச்சல  பிரதேசமும் ஒன்று. இந்த மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் வித்தியாசமான வருகை முறையை பின்பற்றி வருகின்றன. அதாவது பள்ளிகள் கோடை காலத்தில் முழுநேரம் செயல்பட்டு வருகிறது. ஆனால் குளிர்காலத்தில் பள்ளிகள் இயங்கும் நேரங்களில் சில மாற்றங்கள் செய்து வருகின்றது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அளிக்கப்பட்டு வரும் பள்ளி விடுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 10 முதல் 15 வரை விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதாவது டிசம்பர் மாதத்தில் உள்ள பள்ளி விடுமுறையை ரத்து செய்து லோஹ்ரி பண்டிகையின் போது ஜனவரி 3 முதல் 8ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் கல்வியில் கற்றல் இடையூறு ஏற்பட்டுள்ளதால் இந்த விடுமுறை நாட்களை லோஹ்ரி பண்டிகையுடன் இணைக்க வேண்டும் என்று மாநில ஊடக தலைவர் ஷஷி சர்மா வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையில் அகில இந்திய தேசிய கல்வி சம்மேளனத்தின் செயலாளர் பவன் மிஸ்ரா மற்றும் ஹிமாச்சல பிரதேச ஆசிரியர் கூட்டமைப்பு மாநில தலைவர் பவன்குமார் ஆகியோர்கள் பள்ளிகளில் கற்கும் சூழல் மிக சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட விடுமுறை அட்டவணையை மாற்றி ஜனவரி 10 முதல் 15 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |