திண்டுக்கல் பாச்சலூர் அருகே மர்மமான முறையில் சிறுமி இறந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியை சேர்ந்த தாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த சத்யராஜ் என்பவரின் ஒன்பது வயது மகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை பள்ளிக்கு சென்ற சிறுமி பின்னர் காணவில்லை.
பின்னர் சிறுமி பள்ளியில் உள்ள மைதானத்தில் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தாண்டிகுடி போலீசார் சந்தேக மரணம் என்று அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சிறுமி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.