Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூச்சி மருந்து தெளித்ததால்…. உயிரிழந்த மயில்கள்…. விவசாயி அதிரடி கைது….!!

பூச்சி மருந்து கலந்த நெற்பயிரை சாப்பிட்ட 6 மயில்கள் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி விவசாயியை கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள எஸ்.கீரந்தை பகுதியில் வனச்சரக அலுவலர் ராஜா தலைமையில் வனவர் அன்புசெல்வம் மற்றும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த விவசாய நிலத்தில் 6 மயில்கள் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த வனத் துறையினர் அதனை மீட்டு நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயியான ராமர் என்பவர் தனது விவசாய நிலத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளால் நெற்பயிரை சேதம் விளைவிப்பதை தடுப்பதற்கு வயலைச் சுற்றிலும் பூச்சிக்கொல்லி மருந்தினை கலந்து வைத்துள்ளார்.

இதனை மயில்கள் சாப்பிட்டதால் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் ராமரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி தேசிய பறவையான மயில்களை விஷம் வைத்து கொலை செய்வதும், வேட்டையாடுவதும் மிக பெரிய குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு சுமார் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே மயில், மான் போன்ற வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |