Categories
மாநில செய்திகள்

கோவையில் நாளை(டிச-24)…. இந்த பகுதிகளில் கரண்ட் கட்…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக கோவையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி கோவை மாவட்டம் கருவலூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி கருவலூர் துணை மின்நிலையத் திற்குட்பட்ட கருவலூர் , அரசப்பம்பாளையம் , நைனாம் பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி , எலச்சிப்பாளையம், மருதூர், காளிப்பாளையம், நம்பியம் பாளையம், உப்பிலிபாளையம் , மனப்பாளையம் , காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |