மிகவும் பழமையான இடிந்து விழும் நிலையிலிருந்த தனியார் கட்டிடத்தை இடித்து அகற்றியுள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் 11-வது வார்டில் உள்ள யோகநரசிங்கப் பெருமாள் கோவில் சந்தியில் தனியாருக்கு சொந்தமான பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் ஆபத்து இருப்பதால் இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து ஆர்.டி.ஓ கௌசல்யாவிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அதனை விசாரித்த ஆர்.டி.ஓ சம்பவ இடத்திற்கு சென்று கட்டிடத்தை பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து அந்த பழமையான கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அதனடிப்படையில் அந்த கட்டிடத்தை பொக்லைன் இந்திரத்தின் உதவியுடன் முழுவதுமாக இடித்து அகற்றியுள்ளனர். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கிராம நிர்வாக அதிகாரி கருப்பையா ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.