“விவசாய பெண்களும், விவசாய நிதிநிலை அறிக்கையும்” என்ற தலைப்பில் பெண் விவசாயிகள் மாநாடு நடைபெற்றுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் “விவசாய பெண்களும், விவசாய நிதிநிலை அறிக்கையும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவின் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 2 நாள் மாநாடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரேஷன் கடையில் சிறு தானியங்களையும் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
இந்த மாநாட்டிற்கு களஞ்சியம் விவசாயிகள் சங்க மாநில தலைவர் பொன்னுத்தாயி தலைமை தாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து திராவிட கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், விவசாய சங்க மதுரை மாவட்ட செயலாளர் சந்தானம், சர்வோதீப் பெண்கள் இயக்க இயக்குனர் சகாய சங்கீதா, களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்க செயலாளர் சித்ராதேவி, இணைப்பு குழு மாநில தலைவி ஷீலு, சங்க நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட விவசாய பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.