Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு இதற்கு அனுமதி இல்லை…. பிரதமர் சர்ச்சைக்குரிய பேச்சு…. பல தரப்பினர் கண்டனம்…..!!!!

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியபோது, ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கிளப்பிவிட்டார். பெண்கள் கல்வி பயில அனுமதிக்காமல் இருப்பது ஆப்கானிய கலாச்சாரம் என்று அவர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் பெண்கள் குறித்து தவறான கருத்துகளை கூறியதாக அவர் மீது கண்டனங்கள் கிளம்பியுள்ளன. அந்த மாநாட்டில் பங்கேற்ற இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் அவரது இந்த கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருப்பதாக கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின் கடைகளில் உள்ள விளம்பர படங்களில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை நீக்க ஆணையிட்டுள்ளனர். மேலும் பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. 2021-ஆம் ஆண்டு தான் ஆப்கானிஸ்தானில் வாழும் பெண்களுக்கு மிக கஷ்டமான ஆண்டாக அமைந்துள்ளது என்று ஐ.நா.சபையின் மனித உரிமைகள் சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தலீபான்கள் ஆட்சிக்குப்பின் ஆப்கானிஸ்தானில் அரங்கேறும் துயரங்களில் இருந்து சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கருத்தை பாகிஸ்தான் முன்னிறுத்தி வரும் வேளையில் பாகிஸ்தான் பிரதமரின் இந்த சர்ச்சை கருத்து சர்வதேச அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Categories

Tech |