Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு…”தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்”… பேசும்பொழுது கவனமாகவே பேசுங்கள்…..!!

மேஷ ராசி அன்பர்களே…!!  இன்று உங்கள் மனதில் அன்பும் கருணையும் அதிகரிக்கும். நண்பர்களுக்கு இன்று உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பான வகையில் இருக்கும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இஷ்டதெய்வ வழிபாடு இன்று நடத்துவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சிறப்பாக நடக்கும்.

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானம் கொஞ்சம் வேண்டும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மேலிடத்தின் அனுசரணையில் திக்குமுக்காடிப் போவீர்கள். இன்றைய நாள் ஓரளவு சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் பேசும்பொழுது கவனமாகவே பேசுங்கள்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதுபோலவே படித்த பாடத்தை எழுதி பார்ப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு 

அதிஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |