கர்நாடக மாநிலம் மங்களூருவில் செல்போனை திருடியதாக கூறி ஒரு மீனவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. வைலா சீனு என்ற மீனவரை செல்போன் திருடியதாக கூறி இவருடன் இருந்த சக மீனவர்கள் அவருடைய கால்கள் இரண்டையும் கயிற்றால் கட்டி ஒரு கிரேனில் தலைகீழாக தொங்க விட்டு அடித்துள்ளனர். அதன் பின்னர் சக மீனவர்கள் 6 பேரும் சுற்றி நின்று திருடியதை ஒத்துக் கொள்ளுமாறு துன்புறுத்தியுள்ளனர்.
இந்த காட்சியைப் படம் பிடித்த ஒருவர் இதனை வீடியோவாக சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த மங்களூர் நகர போலீசார் அந்த மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஆந்திராவை சேர்ந்த மீனவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து மீனவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.