Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. பொங்கல் பண்டிகை…. இந்த ஊர்களுக்கு எல்லாம் சிறப்பு ரெயில்கள்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகை காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கீழ்க்கண்ட சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி,

* தாம்பரம்-நெல்லை (வண்டி எண்: 06601) இடையே வருகிற ஜனவரி மாதம் 12-ந்தேதி இரவு 9.45 மணிக்கும், நெல்லை-தாம்பரம் (06002) இடையே வருகிற ஜனவரி மாதம் 13-ந்தேதி இரவு 9.30 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

* எழும்பூர்-நாகர்கோவில் (06005) இடையே ஜனவரி 13-ந்தேதி மதியம் 3.30 மணிக்கும், மறுமார்க்கமாக நாகர்கோவில்-எழும்பூர் (06006) இடையே வருகிற ஜனவரி 14-ந்தேதி மதியம் 3.10 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

* நாகர்கோவில்-தாம்பரம் (06004) இடையே வருகிற ஜனவரி மாதம் 16-ந்தேதி மாலை 4.15 மணிக்கும், மறுமார்க்கமாக தாம்பரம்-நாகர்கோவில் (06003) இடையே ஜனவரி 17-ந்தேதி மதியம் 3.45 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

* நெல்லை-தாம்பரம் (06040) இடையே ஜனவரி 16-ந்தேதி இரவு 7 மணிக்கும், தாம்பரம்-நெல்லை (06039) இடையே ஜனவரி 17-ந்தேதி காலை 10.45 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

 

Categories

Tech |