தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் மிக முக்கிய கட்டுப்பாடு ஒன்று போடப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் தொற்று உலகின் அனைத்து நாடுகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் என்னும் மாநிலம் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு அதிரடியான கட்டுப்பாடு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது வருகின்ற வியாழக் கிழமையிலிருந்து பொது இடங்களில் இனி கட்டாயமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.