வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் இன்று அதிகாலை 3.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த 22ஆம் தேதி பேரணாம்பட்டு பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அங்கேயே இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்தடுத்து மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.