தொழிலாளியின் வீட்டில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காக்காத்தோப்பு பிரிவில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நடந்து வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் குமார் என்பதும், தொழிலாளியான சாமி என்பவரது வீட்டில் 7 பவுன் தங்க நகைகளை திருடியதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து திருடிய நகைகளை அடமானம் வைத்து குமார் சென்னை, மதுரை, திண்டுக்கல் என பல்வேறு ஊர்களுக்கு சென்று பணத்தை செலவு செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.