Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு…”பணவரவு நன்மையை கொடுக்கும்”.. வெளியூர் பயணம் நன்மையை கொடுக்கும்..!!

ரிஷப ராசி அன்பர்களே..!!!  இன்று இஷ்ட தெய்வ அனுக்கிரகம் புதிய நன்மைகளை பெற்றுக் கொடுக்கும். அவமதித்து பேசியவர் தன் குறையை உணர்ந்து அன்பு பாராட்டக் கூடும். தொழிலில் உருவான தாமதம் விலகிச் செல்லும். பணவரவு நன்மையை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். இன்று கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பிள்ளைகள் மூலம் மனக்கஷ்டங்கள் ஏற்பட்டு நீங்கும்.

இன்று ஓரளவு புத்துணர்ச்சி யுடனே காணப்படுவீர்கள். உங்களுடைய திறமை இன்று வெளிப்படும். இன்று வெளியூர் பயணம் உங்களுக்கு நன்மையை கொடுப்பதாகவே அமையும். அதுமட்டுமில்லாமல் தனவரவு ஓரளவு சிறப்பை கொடுக்கும். தொலைபேசியில் இருந்து வரும் தகவல்கள் உங்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். காதல் கைகூட கூடிய சூழலும் இன்று இருக்கு. இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். வெற்றிபெறும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இருந்தாலும் விளையாட்டு துறையில் ஆர்வம் இன்று அதிகரிக்கும்.

இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |