முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த தேர்தல் வாக்குறுதியாக பல விஷயங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தது. அதில் முக்கிய ஒன்றாக பார்க்கப்பட்டது அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் விசாரிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விஷயம் தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்தது.
அதன் ஒரு பகுதியாக அடுத்தடுத்து அமைச்சர்கள் வீடுகளின் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி, உரிய அமைசர்கள் மீது வழக்கு பதிவு செய்து, பல ஆதாரங்களை கைப்பற்றியதாக கூறப்படுகின்றது. இதற்க்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும் கூட திமுக தேர்தல் வாக்குறுதியாக சொன்னதை செய்வதில் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில் தான் கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்குவதாக கூறி 3 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.. அதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை காவல் துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்..
அவர் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இருப்பதற்காக அவர்களுக்கு விமான நிலையங்களில் லூக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்று இதுவரை தெரியவில்லை..இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் கே.டி ராஜேந்திர பாலாஜி மனுதாக்கல் செய்துள்ளார்..
இதையடுத்து தற்போது, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது சட்டத்தின் முன்பு அதிமுக முன்னாள் மாஜிக்களை நிறுத்தியாக வேண்டும் என்ற உறுதியை காட்டுவதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்.
அதே போல திமுக நிர்வாகிகள் தளபதி ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள தமிழக அரசு, தவறு செய்த முன்னாள் அமைச்சர்களை சட்டத்தின் முன்பு நிறுத்துவார் என்றும், இந்த நடவடிக்கை அடுத்தடுத்து இருக்கும் என திமுக ஆட்சியை குஷியாக கொண்டாடிவருகின்றனர். அமைச்சர்களை அடுத்தடுத்து குறிவைக்கப்படுவது அதிமுக கழகத்தினரை கலகத்தில் ஆழ்தியுள்ளது.