தமிழகத்தில் அரசு துறை பணிகளுக்கு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகளில் அதிக அளவில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றன. இதனால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு குறைந்த அளவு பணியிடங்களை உள்ளது என்பதால் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழ்மொழி தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றால் மட்டுமே இதர வினாத்தாள்களை மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வில் மட்டும் தமிழ்மொழி தகுதி தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் தரவரிசை பட்டியல் கணக்கிட பயன்படுத்திக் கொள்ளப்படும். குரூப்-1 குரூப்-2 மற்றும் 2A போன்ற தேர்வுகளில் தமிழ்மொழி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும். அதுமட்டுமில்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குரூப்-4 மட்டும் முறை நிலைகொண்ட தேர்வில் தமிழ் மொழி தகுதி தேர்வானது கொள்குறி வகையில் கேட்கப்படும்.
இதையடுத்து இரண்டு நிலைகளைக் கொண்ட குரூப்-1 ,குரூப்-2, 2ஏ தேர்வு எழுத தகுதி தேர்வை விரிவாக விடை அளிக்க கூடிய வகையில் கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ்மொழி தகுதி தேர்வுக்கான பாடத் திட்டங்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்ற www.tnpsc.gov.in இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த இணையதளத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வுகளுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது