Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி …. பாட்னா த்ரில் வெற்றி ….!!!

புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு நடந்த ஆட்டங்களில் குஜராத், டெல்லி மற்றும் பாட்னா அணிகள் வெற்றி பெற்றுள்ளது .

8-வது  புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.இதில் 2-வது நாளான நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் 34-27 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ராகேஷ் நார்வல், கிரிஷ் மாருதி தலா 7 புள்ளிகள் எடுத்தனர் .இதன் பிறகு மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி -புனேரி பால்டன் அணிகள் மோதின .இதில் 41-30 என்ற புள்ளி கணக்கில்  டெல்லி அணி வெற்றி பெற்றது .

இதையடுத்து நடந்த மற்றொரு போட்டியில் பாட்னா பைரட்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இதில் 42-39 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா அணி த்ரில் வெற்றி பெற்றது. இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை-தபாங் டெல்லி அணியும், இரவு  8.30  மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில்  தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் அணியும்,  9.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

Categories

Tech |