Categories
மாநில செய்திகள்

BREAKING : 13 மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. பரபரப்பு….!!!!

பரமக்குடி அருகே அரசு பள்ளியில் 13 மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பெருமாள் கோவில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது. ஆசிரியர் அரசு பள்ளி மாணவிகளை கண்ட இடத்தில் தொடுவது, மேலாடையை இழுப்பது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது என பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது.  இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அப்பள்ளியில் ஆசிரியர் ராமராஜ் என்பவர் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.  இதனால் அவர் தற்போது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் புகாரில் மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட்டையும் தலைமறைவாக உள்ள நிலையில் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |