வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வங்காளதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .இத்தொடருக்கான அணி நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சமீபத்தில் நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி அசத்திய நியூஸிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் நியூசிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதில் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமான ஆடுகளத்தில் நடைபெறும் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களில் நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா மட்டுமே தேர்வாகியுள்ளார். அதே சமயம் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக டாம் லாதம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.