தமிழகத்தில் கொரோனா பிரச்சினையே இன்னும் ஓயாத நிலையில் அடுத்ததாக புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயிலில் வரும் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி நடக்கும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.