Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3 ஆண்டுகளாக கொடுமைப்படுத்திய தந்தை…. அதிர்ச்சியடைந்த தாயார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக லாரி டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் பகுதியில் லாரி டிரைவர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது 10 வயதுடைய மகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் தாயார் இது குறித்து கேட்டபோது தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளாக லாரி டிரைவர் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. அதன்பின் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |