Categories
மாநில செய்திகள்

Omicran: மக்களே…! இதெல்லாம் கட்டாயம்…. முதல்வர் முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று 34 பேருக்கு உறுதியான நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கருத்து நிலை வந்தது. இதனை தொடர்ந்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடுவதால் ஒமைக்ரான் நோய்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவேண்டும். மாவட்ட நிர்வாகம் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவ துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தவறாது தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் திரையரங்குகள் ஆகியவற்றுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டும் நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |