Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பெண்களே…! சுயதொழில் தொடங்க…. ரூ.3 லட்சம் வரை கடன்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். மேலும் சுயமாகவே சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டனர். வீட்டிலிருந்தபடியே சில பெண்கள் சுய தொழில் ஆரம்பித்து வெற்றியும் கண்டு வருகின்றனர். இவ்வாறு தொழில் தொடங்கும் பெண்களுக்கு பணம் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு அரசும், சில தனியார் வங்கிகளும், தனியார் அமைப்புகளும் சில திட்டங்களை செயல்படுத்தி அதன் கீழ் கடன்  உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து சிறப்பு கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தில் மிகக்குறைந்த வட்டியில் மூன்று லட்சம் வரையில் பெண்களுக்கு கடனுதவி கொடுக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பெண்கள் மேம்பாட்டு கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்து கடன் உதவி பெற விரும்பும் 22 முதல் 25 வயது நிரம்பிய பெண்கள் பிராந்திய கிராமப்புற வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் இருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இவர்களுடைய குடும்ப வருமானம் 1.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பேக்கரி, கண்ணாடி தயாரிப்பு, கேன்டீன், கேட்டரிங், பியூட்டி பார்லர், காப்பி பவுடர் தயாரிப்பு உள்ளிட்ட 88 வகையான சுய தொழிலுக்கு இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் கடன் பெறலாம். வட்டி இல்லாமல் கூட இந்த திட்டத்தில் கடன் கிடைக்கும். மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு வருமான வரம்பில் சலுகை உண்டு.  அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்தில் அரசிடமிருந்து 30% மானிய உதவியும் கிடைக்கிறது. எனவே சுயதொழில் செய்து தங்களுடைய சொந்த காலில் நிற்க விரும்பும் பெண்கள் இவ்வாறு அரசு வழங்கும் திட்டத்தில் கடனுதவி பெற்று தஙக்ளின் இலக்கை அடையலாம்.

Categories

Tech |