Categories
உலக செய்திகள்

“இது என்ன கொடூரம்….? மனிதர்களை கொன்று மூளையை திங்கும் சைக்கோ கில்லர்…..!!

அமெரிக்காவில் ஒரு சைக்கோ கொலைகாரன், மனிதர்களை கொன்று உறுப்புகளை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவில் இருக்கும் Idaho என்னும் மாகாணத்தின் சாலையோரத்தில் நின்ற ஒரு லாரியில்,  ஒரு முதியவர் கொடூரமாக கொல்லப்பட்டு தலைகீழாக தொங்கவிடப்பட்டிருந்தார். அதனை பார்த்தவர்கள், உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்டனர். அதன்பின்பு சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்கு அனுப்பினர்.

அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்த முதியவர் டேவிட் என்றும், அவரை ஜேம்ஸ் டேவிட் என்ற நபர் கொலை செய்ததும் தெரியவந்தது. அதன்பின்பு, ஜேம்ஸ் டேவிட்டின் வீட்டிற்கு சென்று காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரின் வீட்டில் இருந்த மைக்ரோவேவ் ஓவனில் ரத்தக்கரை இருந்திருக்கிறது.

மேலும், அவரின் சமையலறையில், நுரையீரல், கல்லீரல் மற்றும் ரத்தம் என்று வீடு முழுக்க  போர்க்களமாக கிடந்திருக்கிறது. அதாவது, ஜேம்ஸ், மனித உறுப்புகளை உண்டால் தன் மூளை சுறுசுறுப்புடன் இயங்கும் என்று நம்பி, மனிதர்களை கொன்று அவர்களின் உறுப்புகளை சாப்பிட்டு வந்துள்ளார். மேலும், அந்த முதியவரை கொன்று அவரின் மூளையை சாப்பிட்டிருக்கிறார்.

அவரை, உடனடியாக கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிபதி, அவரை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று மருத்துவ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறார். இவர் செய்த குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், 14 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |