Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

30 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்…. சாலையில் ஏற்பட்ட விரிசல்…. தீவிரமாக நடைபெறும் பணி…!!

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் நகருக்கு எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக எமரால்டு அணையிலிருந்து பெரிய குழாய்கள் சாலையின் அடிப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எமரால்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு அழுத்தம் ஏற்பட்டதால் சுமார் 30 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்து வீணாகியுள்ளது.

மேலும் தண்ணீரின் அழுத்தம் தாங்க முடியாமல் சாலையில் விரிசல் ஏற்பட்டதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை சிலர் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிநீர் விநியோகத்தை நிறுத்தி உடைந்த குழாயை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |