Categories
தேசிய செய்திகள் பசும்பால் பல்சுவை

இனி அக்கவுண்டில் காசு இல்லாமலே…. 10,000 ரூபாய் வரை எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?…. வாங்க பார்க்கலாம்….!!!

நாட்டு மக்கள் அனைவரையும் வங்கி சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஜீரோ பேலன்ஸ் ஆக்கவுண்ட், விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிறைந்து உள்ளது. இந்தக் கணக்கு உங்களிடம் இருந்தால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய உள்ளது. ஜன்தன் வங்கி கணக்கில் ஓவர் டிராஃப்ட் என்ற வசதி ஒன்று உள்ளது.

அதன் மூலமாக வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் நீங்கள் பணம் எடுத்துக் கொள்ள முடியும். ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் இந்த வசதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் ஆரம்ப காலத்தில் 5000 மட்டுமே ஓவர் டிராப்ட் வசதி இருந்தது. அதனால் அதிகபட்சமாக 5 ஆயிரம் வரையில் மட்டுமே எடுக்க முடியும். தற்போது அந்த வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கி கணக்கு திறக்கப்பட்டு ஆறு மாதங்களிலேயே இந்த வசதியை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது ஓவர் டிராப்ட் வசதியின் கீழ் நீங்கள் அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ள முடியும்.

உங்கள் கணக்கு ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பது அவசியம். அதில் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்க வேண்டும். இந்த வசதியை பெறுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் நிறைய சலுகைகள் உள்ளன. காப்பீடு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகள் இந்த கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகின்றது. இந்த சேவைகள் அனைத்தையும் நீங்கள் பெறுவதற்கு உங்களுடைய ஆதார் அட்டையை வங்கி கணக்கில் இணைத்து இருப்பது அவசியம்.

Categories

Tech |