Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு?… முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், உருமாறிய கொரோனா வகை வைரஸ் ஒமைக்ரான் அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் தடுப்பூசி போடும் பணி மட்டுமல்லாமல் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகும் என்று தகவல் வெளியாகி நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதையடுத்து தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்றும், ஒமைக்ரான்பரவல் 10 சதவீதம் இருக்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசித்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தீவிர அவசர கட்டுப்பாட்டு மையங்களை மீண்டும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தி உள்ளதாக கூறியுள்ளனர்.

Categories

Tech |