Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என் மகளை யாரு கவனிப்பா….? சடலமாக மீட்கப்பட்ட இருவர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தாய் மற்றும் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லிகவுண்டன் பாளையம் பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலா என்ற மனைவியும், பிரியா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பிரியாவிற்கு சற்று மன வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட பிரியாவினால் அக்கம்பக்கத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் மகளுக்கு திருமணம் ஆகாததால் தனக்கு பிறகு பிரியாவை யார் கவனித்து கொள்வார்கள் என நினைத்து கலா மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனால் தனது மகளுக்கு பூச்சி மருந்தை கொடுத்து அதனை தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாய் மற்றும் மகளின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |