உலகில் தற்போதைய நவீன காலத்தில் அனைத்து வேலைகளும் இணையதளம் மூலமாக செய்து வருகின்றனர். இதனால் மக்களுக்கு வேலையும் நேரமும் மிச்சமாகிறது. அதிலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நெட் பேங்கிங் மூலம் நமது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினர். இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிதானது.
இதனால் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிகரித்து வருகிறது. நெட் பேங்கிங் மூலம் பொருட்கள் வாங்கும்போது நிறுவனத்தின் இணையதளத்தில் பணம் செலுத்தும் போது நமது வங்கியின் கணக்கு எண் மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட் விவரங்களை முதல் முறை மட்டும் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு தானாகவே பதிவாகிவிடும். இந்த முறை வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் விபரங்களை தானாகவே பதிவு செய்வதை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு தயாராக கால அவகாசம் தேவைப் பட்டதால் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் விவரங்களை பண பரிமாற்றம் நிறுவனங்கள் மற்றும் முகமை பதிவு செய்யக் கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவை அமல்படுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.