Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு…”சிலர் சொல்லும் குறைகளை பொருட்படுத்த வேண்டாம்”… சமூகத்தினர் உங்களை மதிக்க கூடும்..!!

கடக ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் சிலர் சொல்லும் குறைகளை பொருட்படுத்த வேண்டாம். கூடுதல் உழைப்பால் தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணம் செலவு இன்று அதிகரிக்கும். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் கொடுக்க வேண்டாம். இன்று காரியத்தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகிச்செல்லும். மனதில் சிறு சஞ்சலம் ஏற்பட்டு மறையும். தன்னம்பிக்கை இன்று கூடும். புத்தி தெளிவு ஏற்படும்.

நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப் பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் காரிய வெற்றியும் இன்று ஏற்படும். மனம் மகிழ்ச்சியாக காணப்படும். சமூகத்தினர் உங்களை மதிக்க கூடும். அனைவரின் ஆதரவும் இன்று உங்களுக்கு கிடைக்கும். இன்று உழைப்பால் முன்னேறும் நாளாகவே இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே அன்பும் இருக்கும். பாசமும் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் ஒற்றுமையும் வளரும். நீங்கள் சொல்வதை குடும்பத்தார் கேட்டுக் கொள்வது உங்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இன்று மாணவர்கள் முற்றிலும் மிகவும் சிறப்பாக கல்வியில் ஈடுபடுவார்கள்.

இன்று செய்யக்கூடிய முயற்சிகள் அனைத்துமே மாணவர்களுக்கு எளிமையாக நடந்தேறும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி மிகப் பெரிய செல்வச் செழிப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

 

Categories

Tech |