Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக  அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களும் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனைப்போலவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்த்தப்படுகிறது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு 28% அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஊழியர்களின் மாத சம்பளம் 15,000 என்றால் 28% அகவிலைப்படி ரூ.4200 பெறுவார்கள். தற்போது 3% அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால் ரூ.4650 வழங்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அடிப்படைச் சம்பளத்தில் 3% கணக்கிடுவதன் மூலம் எவ்வளவு சம்பளம் உயர்வு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடிகிறது. அது மட்டுமில்லாமல் மொத்த நிலுவைத் தொகையையும் தங்கள் PF கணக்கிற்கு செலுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால் தமிழக மற்றும் உத்தரப்பிரதேச அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியில்.உள்ளனர். மேலும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜனவரி மாதத்தில் 3% உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |