Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்க கேள்விப்பட்டது உண்மைதான்……. உண்மையை உடைத்த நடிகர் தனுஷ்……. என்னன்னு பாருங்க……!!!

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும், இவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ”வாத்தி” என பெயரிடப்பட்ட படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

actor-Dhanush-next-with-Arun-Matheswaran

இதனையடுத்து, இவர் அடுத்ததாக இயக்குனர் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த தகவலிற்கு ‘ஆம். உங்கள் யூகங்கள் உண்மைதான்’ என அவரே உறுதி செய்துள்ளார்.

அதன்படி, ‘சாணிகாகிதம்’ படத்தின் இயக்குனரான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட பதிவிற்கு இயக்குனர் அருண் மாதேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.

https://twitter.com/ArunMatheswaran/status/1474305079335219200

Categories

Tech |