ஐ.நா. பொதுச்சபை தலைவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா. பொதுச்சபை தலைவரும் மாலத்தீவுகளின் வெளியுறவுத் துறை அமைச்சருமான அப்துல்லா சாஹிதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ” எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு சிறிய அளவிலான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
கொரோனா தடுப்பூசியின் இரு தவணைகள் மட்டுமின்றி ஊக்கத் தடுப்பூசியை ஏற்கனவே போட்டுக் கொண்டுள்ளேன். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் தொற்றுக்கு எதிராக போராடி வரும் கோடிக்கணக்கான மக்களுக்காக வேண்டிக் கொள்கிறேன். ஆகவே அனைவருக்கும் பாரபட்சமின்றி தடுப்புசி கிடைக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.